பாஸ்டனில் தீ விபத்து: தாய் மற்றும் குழந்தைகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புப்படையினர்
பாஸ்டனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று முழுவதுமாக எரிந்துகொண்டிருக்கும் நிலையில், தீயணைப்புப் படை வீரர் ஒருவர் குடியிருப்பில் சிக்கிக்கொண்ட தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டுள்ளார்.
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று முழுவதுமாக எரிந்துகொண்டிருக்கும் நிலையில், தீயணைப்புப் படை வீரர் ஒருவர் குடியிருப்பில் சிக்கிக்கொண்ட தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டுள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் மிகப்பெரிய ஏணி ஒன்றை பயன்படுத்தி மூன்றாவது மாடியில் இருந்த அவர்களை பத்திரமாக மீட்டுளள்னர்.
தீயணைப்பு வீரர் தன் கையில் குழந்தையுடன் ஏணியில் இறங்கும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தாய் மற்றும் அவரது குழந்தைகளை மீட்ட புகைப்படங்களை பாஸ்டன் தீயணைப்புத்துறை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது.
மீட்கப்பட்ட மூவரும் சிறு காயங்களுடன் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலை 8:00 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.