நமீபியா உள்ளாட்சித் தேர்தலில் வென்ற அடால்ஃப் ஹிட்லர் 
உலகம்

நமீபியா உள்ளாட்சித் தேர்தலில் வென்ற 'அடால்ஃப் ஹிட்லர்’

நமீபியா நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லரின் பெயரைக் கொண்ட அரசியல் பிரமுகர் வெற்றி பெற்றுள்ளார்.

DIN

நமீபியா நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லரின் பெயரைக் கொண்ட அரசியல் பிரமுகர் வெற்றி பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டின் ஓஷானா மாகாணத்தில் உள்ள ஓம்புண்ட்ஜாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் உள்ளூர் அரசியல்வாதியாக அறியப்படும் அடால்ஃப் ஹிட்லர் யுனோனா போட்டியிட்டார்.

இதில் தனக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளரை 1,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜெர்மனி நாட்டின் அதிபரும், சர்வாதிகாரியுமான ஹிட்லரின் பெயரைக் கொண்ட இந்த வேட்பாளரின் வெற்றி பெற்றது தற்போது பிரபலமாகியுள்ளது.

வெற்றிக்குப் பின் பேசிய ஹிட்லர், “உலகை ஆதிக்கம் செய்வதற்கான திட்டங்கள் எதுவும் தன்னிடம் இல்லை” எனத் தெரிவித்தார். நமிபியா முன்பு ஜெர்மனி நாட்டின் காலனி பகுதியாக இருந்ததால் மக்கள் ஜெர்மன் பெயர்களைக் கொண்டிருப்பது வழக்கமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

"நான் இதை முற்றிலும் சாதாரண பெயராக பார்த்தேன். ஹிட்லர் உலகம் முழுவதையும் வெல்ல விரும்புகிறான் என்பதை மட்டுமே ஒரு இளைஞனாக நான் புரிந்துகொண்டேன்" என ஹிட்லர் யுனோனா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT