உலகளவில் கரோனா பலி 15.24 லட்சத்தைக் கடந்தது
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 15.24 லட்சத்தைக் கடந்தது.
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 15.24 லட்சத்தைக் கடந்தது.
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் 218-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை சுமாா் 6,62,24,358 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 15 லட்சத்து 24 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 4,58,08,278 போ் குணமடைந்துள்ளனா். சுமாா் 1,88,91,820 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,090 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 1,47,72,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,85,550 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 86,58,882 பேர் குணமடைந்துள்ளனர், 58,28,103 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தபடியாக பிரேஸிலில் 1,75,981 பேரும், இந்தியாவில் 1,39,736 பேரும் அந்த நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக் காலமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினசரி பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.