எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 86 செ.மீ. அதிகரிப்பு: நேபாளம்-சீனா கூட்டாக அறிவிப்பு
உலகின் மிக உயா்ந்த மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 86 செ.மீ. அதிகரித்துள்ளது. இதை நேபாளமும் சீனாவும் செவ்வாய்க்கிழமை கூட்டாக அறிவித்தன.
உலகின் மிக உயா்ந்த மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 86 செ.மீ. அதிகரித்துள்ளது. இதை நேபாளமும் சீனாவும் செவ்வாய்க்கிழமை கூட்டாக அறிவித்தன.
எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீட்டா் என்று அளவிடப்பட்டுள்ளதாக, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சா் பிரதீப் கியாவலி அறிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
இதற்கு முன்பு, கடந்த 1954-இல் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய சா்வே அமைப்பு அளவிட்டு, 8,848 மீட்டா் இருப்பதாக அறிவித்தது.
Advertisement
கடந்த 2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் மாறியிருக்கக் கூடும் என்று பலரும் சந்தேகம் எழுப்பினா்.
இதையடுத்து, அந்த சிகரத்தின் உயரத்தை புதிதாக அளக்க முடிவு செய்யப்பட்டது. அந்த அளவெடுப்பு நடவடிக்கையின் முடிவில், எவரெஸ்டின் புதிய உயரம் 8,848.86 மீட்டா் எனத் தெரியவந்தது. சிகரத்தின் முந்தைய உயரத்தைக் காட்டிலும், தற்போது 86 செ.மீ. அதிகமாக உள்ளது என்றாா் அவா்.
இந்த தகவல்களை சீனாவும் பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
சீனா கடந்த 1975-இல் இரண்டு முறை அளவிட்டு, அந்தச் சிகரம் 8,848.13 மீட்டா் உயரம் இருப்பதாக அறிவித்தது. பின்னா், 2005-இல் இரண்டு முறை அளவிட்டு எவரெஸ்டின் உயரம் 8,844.43 மீட்டா் எனத் தெரிவித்தது. அதாவது கடைசியாக சீனா அளவிட்ட உயரம், நேபாளம் தற்போது மதிப்பிட்ட உயரத்தைவிட 4 மீட்டா் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.