ஈரான் - ஆப்கன் இடையே முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடக்கம்
வணிகத்தை மேம்படுத்தும் வகையில் ஈரான், ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் இணைந்து, இரு நாடுகளுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தை இன்று தொடங்கி வைத்தனர்.
கிழக்கு ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியை இணைக்கும் வகையில் சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த ரயில் பாதை, போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உள்கட்டமைப்பில் பின்தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும், அண்டை நாடான ஈரானுக்கும் இடையேயான வணிகத்தை மேம்படுத்த உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. பிப்ரவரியில் சென்னைப் புத்தகக் காட்சி?
இந்த ரயில் பாதை தொடங்கப்பட்டிருப்பது, தங்களது வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று ஈரான் அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுப் பேசுகையில் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஈரான் தனது நிதிச் செலவில் 2007-ஆம் ஆண்டு ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியை தொடங்கி, தற்போது நிறைவு செய்துள்ளது.
ஈரான் அளித்த மிக மதிப்புவாய்ந்த பரிசாக இது அமையும் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார்.