முகப்பு
உலகம்

அமெரிக்காவில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 3000 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த சில நாள்களாகவே கரோனா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டி வருகின்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
US daily death toll from COVID-19 tops 3000
பகிர்:

அமெரிக்காவில் கடந்த சில நாள்களாகவே கரோனா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டி வருகின்றது.

இதுதொடர்பாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 3,071 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் மொத்த உயிரிழப்பு 2,89,188 ஆகவும், பாதிப்பு 1,53,84,264 ஆகவும் அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவின் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேநிலை அடுத்தடுத்த நாள்களிலும் நீடித்தால் மருத்துவமனை அனைத்தும் விரைவில் நிரம்பிவிடும் நிலையில் உள்ளது. 

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களிலுள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் ஏற்கனவே அதிக அளவில் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.