'உலகில் 2022 வரை 5ல் ஒரு பங்கினருக்கு கரோனா தடுப்பூசி கிடைக்காமல் போகலாம்' 
உலகம்

'உலகில் 2022 வரை 5ல் ஒரு பங்கினருக்கு கரோனா தடுப்பூசி கிடைக்காமல் போகலாம்'

உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு 2022-ஆம் ஆண்டு வரை கரோனா தடுப்பூசி கிடைக்காமல் போகலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ENS


பாரீஸ்: உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களுக்கு 2022-ஆம் ஆண்டு வரை கரோனா தடுப்பூசி கிடைக்காமல் போகலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உற்பத்தியாகும் கரோனா தடுப்பூசியில் பாதிக்கும் மேல் வளர்ந்த நாடுகளே முன்பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

உலகளவில் கரோனாவுக்கு 16 லட்சம் பேர் பலியாகியிருக்கும் நிலையில், இந்த பேரிடரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தடுப்பூசி செயல்படும் என்று நம்பப்படுகிறது. 

தற்போது அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது பத்துக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய பல வளர்ந்த நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. உலகளவில் வெறும் 14 சதவீத மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வளர்ந்த நாடுகள், அடுத்த ஆண்டில் உற்பத்தியாகும் தடுப்பூசியில் பாதிக்கும் மேற்பட்ட மருந்துகளை தாங்களே கொள்முதல் செய்ய முன்பதிவு செய்துள்ளன என்று அமெரிக்காவில் கரோனா தொடர்பாள புள்ளி விவரங்களை வெளியிட்டு வரும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இதனால், ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்காமலே போக வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை, கரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் திறன்கொண்ட, பாதுகாப்பான, உலகத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தங்களது உற்பத்தியை அதிகரித்தாலும் கூட, 2022-ஆம் ஆண்டு வரையில் உலகின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு கரோனா தடுப்பூசி கிடைக்காமல் போக வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT