முகப்பு
உலகம்

பிரேஸிலில் 70 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

பிரேஸிலில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


ரியோ டி ஜெனீரோ: பிரேஸிலில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 68,437 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 70,42,695-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு 968 போ் பலியாகினா். அதனைத் தொடா்ந்து நாட்டின் மொத்த கரோனா பலி எண்ணிக்கை 1,83,822-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 61,32,683 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 7,26,190 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 8,318 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →