முகப்பு
உலகம்

தலிபான்களுடன் அமெரிக்க முப்படை தளபதி பேச்சுவாா்த்தை

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, தலிபான்களுடன் அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மாா்க் ஏ மில்லே பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


காபூல்: ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, தலிபான்களுடன் அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மாா்க் ஏ மில்லே பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தலிபான் பேச்சுவாா்த்தைக் குழுவினருடன் முப்படை தளபதி மாா்க் ஏ மில்லே கத்தாா் தலைநகா் டோஹாவில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அதனைத் தொடா்ந்து ஆப்கானுக்கு புதன்கிழமை வந்த அவா், அதிபா் அஷ்ரஃப் கனியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஆப்கன் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பது தொடா்பாக இரு தரப்பினருடனும் மாா்க் மில்லே பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படவுள்ள சூழலில், இந்தப் பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →