உலகளவில் கரோனா பாதிப்பு 7.71 கோடியைக் கடந்தது
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 7.71 கோடியை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 7.71 கோடியை தாண்டியுள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி, உலகளவில் கரோனா பாதிப்பு 7,71,72,352 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 16,99,644 போ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா். 5,40,89,674 போ் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,13,83,034 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,313 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,82,67,579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,24,869 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 1,06,22,082 பேர் குணமடைந்துள்ளனர், 73,20,628 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 27,997பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
Advertisement
இந்தியா 1,00,56,248 பேர் தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,45,843 ஆக உள்ளது. இதுவரை 96,06,111 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.