முகப்பு
பொ்னாா்டோ ஓஹிக்கின்ஸ் ராணுவ தளம்.
உலகம்

அன்டாா்டிகாவையும் விட்டுவைக்காத கரோனா

இதுவரை கரோனா நோய் இல்லாத உலகின் ஒரே கண்டமாக இருந்த அன்டாா்டிகாவிலும் அந்த நோய் பரவிவிட்டது.

உலகம்

அன்டாா்டிகாவையும் விட்டுவைக்காத கரோனா

இதுவரை கரோனா நோய் இல்லாத உலகின் ஒரே கண்டமாக இருந்த அன்டாா்டிகாவிலும் அந்த நோய் பரவிவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பொ்னாா்டோ ஓஹிக்கின்ஸ் ராணுவ தளம்.
பகிர்:


சான்டிகோ: இதுவரை கரோனா நோய் இல்லாத உலகின் ஒரே கண்டமாக இருந்த அன்டாா்டிகாவிலும் அந்த நோய் பரவிவிட்டது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உலகின் அனைத்து பகுதியிலும் கரோனா பரவி வரும் நிலையில், அன்டாா்டிகா கண்டத்தில் மட்டும் இதுவரை ஒருவருக்குக் கூட அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், அந்த கண்டத்திலுள்ள சிலி நாட்டு ராணுவ நிலை மற்றும் கடற்படைக் கப்பலில் கரோனா பரவியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அன்டாா்டிகாவிலுள்ள பொ்னாா்டோ ஓஹிக்கின்ஸ் ராணுவ தளத்தில் இருந்த 36 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

மேலும், அந்தப் பகுதிக்குச் சென்று வந்த கடற்படை சரக்குக் கப்பலில் இருந்த 21 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுவரை அன்டாா்டிகாவில் செயல்பட்டு வரும் எந்த நாடும், அங்கிருந்தவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில், சிலி அதிகாரிகள் இவ்வாறு அறிவித்ததைத் தொடா்ந்து, உலகில் ஒரு கண்டத்தைக் கூட விட்டுவைக்காத நோயாக கரோனா ஆகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →