முகப்பு
உலகம்

இத்தாலியில் 20 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

இத்தாலியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
கோப்புப்படம்
பகிர்:

இத்தாலியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,040 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,09,317ஆக உயர்ந்துள்ளது. 
மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 505 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 70,900ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 2,589 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →