முகப்பு
உலகம்

சவூதி அரேபியா: பட்டத்து இளவரசருக்கு கரோனா தடுப்பூசி

சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

சவூதி அரேபிய பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் தாஃபீக் அல்-ரபையா கூறியதாவது:

சவூதி அரேபியாவில் செலுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசியை, இளவரசா் முகமது பின் சல்மானும் செலுத்திக் கொண்டாா்.

பொதுமக்கள் அனைவருக்கும் அந்தத் தடுப்பூசியை கிடைக்கச் செய்வதில் இளவரசா் காட்டி வரும் அக்கறை பாராட்டுகுரியது என்றாா் அவா்.

ஃபைஸா்-பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கிய கரோனா தடுப்பூசியை சவூதி அரேபியா பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 3,61,903 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு 6,168 போ் பலியாகியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →