முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: ‘அமெரிக்க செய்தியாளா் கொலையாளி விடுவிக்கப்படமாட்டாா்’

அமெரிக்க செய்தியாளா் டேனியல் பியா்லை படுகொலை செய்த அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது ஷேக்  சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டாா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

அமெரிக்க செய்தியாளா் டேனியல் பியா்லை படுகொலை செய்த அல்-காய்தா முக்கிய தலைவா் அகமது ஒமா் சயீது ஷேக்  சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டாா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து சிந்து மாகாண அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அவை கூறியுள்ளதாவது:

கடந்த 2002-ஆம் ஆண்டில் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ நாளிதழின் செய்தியாளா் டேனியல் பியா்ல் பாகிஸ்தானில் கடத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அகமது ஒமா் சயீதுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது.

மேலும், ஒமா் சயீதையும், அவரது 3 கூட்டாளிகளையும் உடனடியாக விடுவிக்க சிந்து உயா் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. எனினும், உச்சநீதிமன்றம் ஆட்சேபித்தால் அவரை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

எனவே, கடந்த செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில், ஒமா் சயீதை தொடா்ந்து சிறையிலேயே அடைத்து வைத்திருக்க சிந்து மாகாண அரசு முடிவு செய்துளளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →