முகப்பு
உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 8.23 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.23 கோடியாக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.23 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 8,23,22,190 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 17,96,292 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 5,83,31,524 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,21,94,374 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,05,939 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,99,77,704 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,46,579 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 1,18,44,472 பேர் குணமடைந்துள்ளனர், 77,86,653 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 29,132 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  

இந்தியா 1,02,45,326 தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 1,48,475 ஆக உள்ளது. இதுவரை 98,33,339 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தவர்களின் நாடுகளின் பட்டியலில் பிரேசில் தற்போது 1,92,716    உயிரிழப்புகளுன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →