முகப்பு
உலகம்

ஆஸ்திரேலியாவில் 2021 பிறந்தது: மக்கள் உற்சாக வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டை ஆஸ்திரேலிய மக்களும் உற்சாகத்துடன் முழக்கமிட்டு வரவேற்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
ஆஸ்திரேலியாவில் 2021 பிறந்தது: மக்கள் உற்சாக வரவேற்பு
பகிர்:

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டை ஆஸ்திரேலிய மக்களும் உற்சாகத்துடன் முழக்கமிட்டு வரவேற்றனர்.

நியூசிலாந்து நாட்டில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்திய நேரப்படி 6.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.

இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மத்தியில் சாலைகளில் குவிந்த மக்கள் உற்சாகமாக முழக்கமிட்டு புத்தாண்டை வரவேற்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வான வேடிக்கைகள் கண்களைக் கவரும் வகையில் அமைந்தது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.