உலகம்

யேமன் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இராக் கண்டனம்

DIN

யேமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய விமான நிலையத்தில் புதன்கிழமை நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இராக் கண்டனம் தெரிவித்துள்ளது.

யேமனில் புதிதாக பதவியேற்ற அமைச்சரவை உறுப்பினர்கள் தரையிறங்கிய விமான நிலையத்தில் புதன்கிழமை நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் யேமன் நாட்டின் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு இராக் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இராக் அதிபர் அகமது அல்-சஹாஃப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “யேமன் நாட்டில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை இராக் கடுமையாக கண்டிக்கிறது. சகோதர நாடான யேமனுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இராக் நிராகரிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

யேமன் விமான நிலையத்தின் மீதான பயங்கர தாக்குதலை ரஷியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஏற்கனவே கண்டித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT