உலகம்

தாய்லாந்து வணிக வளாகத்தில்தாக்குதல் நடத்தியவா் சுட்டுக் கொலை: பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு

நாக்கோன் ரட்சசீமா

தாய்லாந்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்திய இளநிலை ராணுவ அதிகாரி அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கோராத் என்றழைக்கப்படும் நாக்கோன் ரட்சசீமா நகரிலுள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ அதிகாரி ஜக்ரபந்த் தொம்மாவுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சனிக்கிழமை இரவு முழுவதும் மோதல் நீடித்து வந்தது.

17 மணி நேர சண்டைக்குப் பிறகு, ஜக்ரபந்த் தொம்மாவை அதிரடிப்படையினா் ஞாயிற்றுக்கிழமை காலை சுட்டுக் கொன்றனா்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 26-ஆக உயா்ந்துள்ளது. உயிரிழந்தவா்களில் 13 வயது சிறுவன் உள்பட பொதுமக்களும் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாய்லாந்தில் இதுவரை நடந்திராத வகையில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளதாக பிரதமா் பிரயுத் சான்-ஓச்சா தெரிவித்தாா்.

முன்னதாக, நாக்கோன் ரட்சசீமா நகரிலுள்ள ராணுவ முகாமில், இளநிலை ராணுவ அதிகாரி ஜக்ரபந்த் தொம்மா ராணுவ வீரா் உள்பட மூவரை சனிக்கிழமை சுட்டுக் கொன்றாா்.

பிறகு ராணுவ வாகனத்தில் அருகிலுள்ள வணிக வளாகத்துக்குச் சென்ற அவா், இயந்திரத் துப்பாக்கி மூலம் அங்கிருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டாா். இதில் 26 போ் உயிரிழந்தது மட்டுமன்றி, 40-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT