உலகம்

இஸ்ரேல் மீது காசா ராக்கெட் தாக்குதல்

IANS

வாஷிங்டனின் மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் தொடர்பாக இப்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் காசா தீவிரவாதிகள் வீசிய ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு இஸ்ரேலைத் தாக்கியது.

இஸ்ரேலிய ராணுவம் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, "காசாவிலிருந்து இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டது, இது திறந்த வெளியில் விழுந்தது" என்று சின்ஹுவா ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த ராக்கெட் ஸ்டெரோட் நகரத்திலும், முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனிய இடத்தைச் சுற்றியுள்ள பகுதியிலும் அமைந்திருந்த சைரன்களைத் தூண்டியது.

இதுவரை எந்தவொரு சேதமும் உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு காசா பகுதியில் இரண்டு இடங்களைக் குறி வைத்து ராக்கெட்டை ஏவியதற்கான அடையாளம் காணப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்த சமாதானத் திட்டம் பாலஸ்தீனியர்களால் நிராகரிக்கப்பட்டது. மேலும் இப்பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்த நிலையில் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT