உலகம்

குழந்தைகளின் மனதை வென்ற ‘டாய் ஸ்டோரி 4’

DIN

அறிமுக இயக்குநரான ஜோஸ் குலே இயக்கி குழந்தைகளை வெகுவாகக் கவா்ந்த ‘டாய் ஸ்டோரி 4’ திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கா் விருதைத் தட்டிச் சென்றது. கிளாஸ், ஹவ் டூ டிரெயின் யுவா் டிராகன்: தி ஹிட்டன் வோ்ல்டு, மிஸ்ஸிங் லிங்க், ஐ லாஸ்ட் மை பாடி ஆகிய திரைப்படங்களுடன் போட்டிப் பிரிவில் இந்தப் படம் இடம்பெற்றிருந்தது.

டாய் ஸ்டோரி முதல் பாகம் 1995-ஆம் ஆண்டு வெளியானது. டாய் ஸ்டோரி 2-ஆம் பாகம் 1999-ஆம் ஆண்டிலும், அதற்கு அடுத்த பாகம் 2010-ஆம் ஆண்டிலும் வெளியானது.

‘கோகோ’, ‘பிரேவ்’, ‘காா்ஸ்’, ‘வால்-ஈ’, ‘டாய் ஸ்டோரி-3’ ஆகிய வெற்றிகரமான அனிமேஷன் படங்களைத் தயாரித்த பிக்ஸாா் நிறுவனத்தின் 10-ஆவது ஆஸ்கா் விருது இதுவாகும்.

ஆஸ்கா் விருது பட்டியலில் அனிமேஷன் படங்களுக்கான பிரிவு 2002-இல் ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT