சீனாவைத் தொடர்ந்து தைவான் செல்லவும் தடை விதிக்கும் நாடுகள்
வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள, சீனாவைத் தொடர்ந்து தைவான் நாட்டுக்குச் செல்ல ஃபிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது.
தைபே: வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள, சீனாவைத் தொடர்ந்து தைவான் நாட்டுக்குச் செல்ல ஃபிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது.
சீனாவுடன் நெருங்கிய கலாசாரத் தொடர்பு இருந்தாலும், தைவான் மேற்கொண்டு வரும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக இதுவரை அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல், கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 என்ற அளவில் நீடிக்கிறது.
ஆனால், சீனாவுடன் சேர்த்து தைவானுக்கும் செல்ல ஒரு சில நாடுகள் தடை விதித்து வருகின்றன. சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 42 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பாதித்துள்ளது.
இந்த நிலையில், தைவானுக்குச் செல்ல தங்கள் நாட்டு மக்களுக்குத் தடை விதித்து ஃபிலிப்பைன்ஸ் உத்தரவிட்டுள்ளது.
இது தவறான மற்றும் மோசமான முடிவு என்று தைவான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.