முகப்பு
உலகம்

காமெடியில் கலக்கவிருக்கும் சன்னி லியோன்

நடிகை சன்னி லியோன் டிஜிட்டல் மேடையில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சியை எடுத்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:50 PM
பகிர்:

நடிகை சன்னி லியோன்  இணையத்தில் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "இப்போதைக்கு இதைப் பற்றி அதிகம் சொல்ல முடியாது, ஆனால் ஒரு புதிய திட்டத்தின் பகுதியாக இருப்பது உற்சாகமாக இருக்கிறது. நகைச்சுவையை நான் மிகவும் ரசிக்கிறேன். சிரிப்பை பகிர்ந்து கொள்வது எப்போதுமே நல்லது, அது இன்னொருவரின் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறது" என்று சன்னி கூறினார்.

"சன்னி சிறந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டுள்ளார், குறிப்பாக டைமிங்கில் கலக்குவார். அது இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் பிரதிபலிக்கும். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருவாயைத் செயின்ட் கேதரின் சர்ச்சுக்கு நன்கொடையாக வழங்க சன்னி லியோன் முடிவெடுத்துள்ளார். அவரும் அவரது கணவர் டேனியலும் அடிக்கடி அந்த இடத்திற்கு வருகை தந்தபோதுதான், குழந்தைத் தத்தெடுப்பு பற்றிய எண்ணம் அவர்களுக்கு உதித்தது," என்றது அவரது நெருங்கின வட்டாரம்.

சன்னிக்கும் அவரது கணவர் டேனியல் வெப்பருக்கும் நிஷா என்ற வளர்ப்பு மகள் உண்டு. தவிர இந்த தம்பதியினருக்கு நோவா மற்றும் ஆஷர் என்ற இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

தற்போது திகில் நகைச்சுவைப் படமான "கோகா கோலா"வில் சன்னி லியோன்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.