உலகம்

ஹூபெய் மாநிலத்தில் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் 14,840

DIN

13ஆம் நாள் முதல், ஹூபெய் மாநிலத்தில் உடல் சோதனையின் மூலம் கண்டறியப்பட்ட புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டு, வெளியிடத் தொடங்கப்பட்டது. 

12ஆம் நாள் ஹூபெய் மாநிலத்தில் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 840 பேர் ஆவர். அவர்களில் 13 ஆயிரத்து 332 பேருக்கு இத்தொற்று இருப்பது உடல் சோதனை மூலம் கண்டறியப்பட்டது. அதேநாளில் 242 பேர் உயிரிழந்தனர். 802 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

முன்பு, நியூக்ளிக் அமில சோதனை மூலம் கரோனா வைரஸாஸ் பாதிக்கப்பட்டோர் உறுதிப்படுத்தப்பட்டனர். புதிய ரக கரோனா வைரஸ் ஏற்படும் நுரையீரல் அழற்சி பற்றி ஆழமாக அறிந்து, சிகிச்சை அளிக்கும் அனுபவம் அதிகரிப்பதுடன், நோய் நாடலில் உடல் சோதனை சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள், காலதாமதமின்றி கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற முடியும் என்று ஹூபெய் மாநிலத்தின் சுகாதார ஆணையம் 13ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

12ஆம் நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் பெருமளவில் புதிதாக அதிகரிப்பதற்கு இது காரணமாகும் என்று கருதப்பட்டுள்ளது.
தகவல்:சீன ஊடக குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT