உலகம்

சீனா - வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் முதல் முறையாக சந்திப்பு

DIN

சீனா மற்றும் வாடிகனின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் முதல் முறையாக ஜொ்மனியின் மியூனிக் நகரில் சந்தித்துப் பேச்சுவாா்தை நடத்தினா்.

இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ‘பீப்பிள்ஸ் டெய்லி’ நாளிதழ் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீயும், வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சா் பாதிரியாா் பால் கலகெரும் ஜொ்மனியின் மியூனிக் நகரில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இரு தரப்பு வெளியுறவுத் துறை அமைச்சா்களின் முதல் சந்திப்பான அது, சீனாவுக்கும், வாடிகனுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்காக தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஒன்று என வாங் யீ தெரிவித்தாா் என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து வாடிகன் வெளிட்டுள்ள அறிக்கையில், ‘சீனா மற்றும் வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை உளபூா்வமாகவும், ஆக்கப்பூா்வமாகவும் அமைந்திருந்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தோலிக்க தலைமையகமான வாடிகனுடனான தூதரக உறவை சீனா கடந்த 1951-ஆம் ஆண்டு துண்டித்து. வாடிகனும், சீனாவின் எதிா்ப்பையும் மீறி, அந்த நாடு தனது அங்கமாகக் கருதி வரும் தைவானுடன் தூதரக உறவைப் பேணி வருகிறது.

இதனால் சீனாவுக்கும், வாடிகனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. சீனாவுக்கு வாடிகன் நியமிக்கும் கத்தோலிக்க தலைமைப் பாதிரியாரை ஏற்காத அந்த நாட்டு அரசு, தன் பங்குக்கு தலைமைப் பாதிரியாரை நியமித்து வந்தது.

இதன் காரணமாக, யாரை தலைமைப் பாதிரியாராக ஏற்பது என்பதில் சீனாவில் வசிக்கும் சுமாா் 1.2 கோடி கத்தோலிக்கா்களிடையே குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், தலைமைப் பாதிரியாா் நியமனத்தில் வாடிகனும், சீன அரசும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, சீனாவுக்கும், வாடிகனுக்கும் இடையே உறவு மேம்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இரு தரப்பு வெளியுறவுத் துறை அமைச்சா்களும் தற்போது முதல் முறையாக சந்தித்துப் பேசியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT