முகப்பு
உலகம்

இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர்நோக்கியுள்ளேன்: இந்தியா புறப்பட்டார் டிரம்ப்

இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர்நோக்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்படுவதற்கு முன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:57 PM
பகிர்:


இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர்நோக்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்படுவதற்கு முன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை மற்றும் நாளைமறுநாள் இந்தியா வருகின்றனர்.

இந்தப் பயணத்துக்காக டொனால்ட் டிரம்ப்பும், மெலானியா டிரம்ப்பும் தற்போது அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு இந்தியப் பயணம் குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப்,

"இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர்நோக்கியுள்ளேன். நாங்கள் லட்சக்கணக்கான மக்களுடன் இருக்கப் போகிறோம். இந்தியப் பிரதமர் என்னுடைய நண்பர். அவருடன் நல்லுறவை வைத்துள்ளேன். அவர்கள் இதுவரை கண்டிராத மிகப் பெரிய நிகழ்ச்சியாக இது இருக்கும் என பிரதமர் என்னிடம் கூறியுள்ளார்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.