உலகம்

டிஆா் காங்கோ: தாக்குதலில் 24 போ் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் கும்பல் நடத்திய தாக்குதலில் 24 பொதுமக்கள் உயிரிழந்தனா்

DIN

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் கும்பல் நடத்திய தாக்குதலில் 24 பொதுமக்கள் உயிரிழந்தனா். அந்த நாட்டின் பதற்றம் நிறைந்த இடுரி நகரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 12 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இனவாதக் குழுக்கள் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை சுமாா் 700 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், ஆயுதக் குழுக்களில் ஒன்றான இடுரி தேசபக்த கிளா்ச்சிப் படை என்ற குழுவுக்கும், அரசுக்கும் வெள்ளிக்கிழமை சமாதான ஒப்பந்தமம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT