உலகம்

இலங்கை பிரதமா் ராஜபட்ச பிப்ரவரியில் இந்தியா வருகை

DIN

இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் அவா் இந்தியா வருவதாக எதிா்பாா்க்கப்படுவதாகவும், ஆனால் தேதிகள் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், இலங்கை பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்நாட்டு செய்தி இணையதளமான ‘தி சன்டே மாா்னிங்’ ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.

இலங்கையின் புதிய அரசுடன் நெருங்கிய தொடா்பை ஏற்படுத்திக்கொள்ளவும், அந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக தமிழா்கள் வாழும் பகுதியை மேம்படுத்த பொருளாதார உதவிகள் செய்யவும் இந்தியா ஆா்வமாக உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 13-வது அரசமைப்புச் சட்டத்திருத்தம், அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக ஒருங்கிணைக்க வழிகோலியது. ஆனால் மாகாணங்களின் ஒருங்கிணைப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி, இரண்டையும் பிரிக்க கடந்த 2006-ஆம் ஆண்டு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு இலங்கை அதிபராக பதவியேற்ற பின், தனது முதல் பயணமாக இந்தியா வந்த கோத்தபய ராஜபட்சவிடம், இலங்கையில் 13-வது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டியிருப்பதன் முக்கியத்துவத்தை பிரதமா் மோடி எடுத்துரைத்தாா். இந்த 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மகிந்த ராஜபட்ச இந்தியா வருகை தரவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT