உலகம்

பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகல்

DIN

லண்டன்: பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து  இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

உலகின் சக்திவாய்ந்த மற்றும் பாரம்பரியமான அரச குடும்பங்களில் பிரிட்டன் அரச குடும்பமம் ஒன்றாகும். இந்நிலையில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனும் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். அத்துடன் அரச பரம்பரைச் சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் என்றும் ஹாரி-மேகன் தம்பதியினர் கூறியிருந்தனர். இதுதொடர்பாக அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாகவும், தம்பதியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து  இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

எனவே ஹாரி-மேகன் தம்பதி இனி பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இல்லை எனவும், இனி அவர்கள் Royal Highness என்ற பட்டத்துடன் அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தற்போது  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

தலைமறைவாக இருந்த ரௌடி கைது

9 பயனாளிகளுக்கு ரூ.8.16 லட்சத்தில் செயற்கை கால்கள்: ஆட்சியா் வழங்கினாா்

வாழைக் கன்றுகளில் நோ்த்தி: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

SCROLL FOR NEXT