உலகம்

சீனாவில் 5G தொழில் நுட்பத்தின் வளர்ச்சி

DIN

2019ஆம் ஆண்டு சீனத் தொழிற்துறைப் பொருளாதாரத்தில் சீரான இயக்கம் காணப்பட்டது.

ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, 5.7 சதவீதம் அதிகரித்தது. கடந்த ஆண்டில் சீனாவில் 5G செல்லிடப்பேசி தகவல் தொடர்பு இணையத்தின் அடிப்படை வசதிக் கட்டுமானம் மற்றும் பயன்பாடு வலுப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு 5G தொழில் நுட்பத்தின் பயன்பாடு மற்றும் வளர்ச்சியை சீனா மேலும் விரைவுபடுத்த உள்ளது என்று சீன தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மியெள வெய் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் திங்கள், சீனாவில் 5G இணையம் வணிக நோக்கிற்காக அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த ஆண்டு இறுதி வரை, சீனாவில் கட்டிமுடிக்கப்பட்ட 5G தளங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியது என்று மியெள வெய் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டு இறுதி வரை, சீனாவில் 5G செல்லிடபேசி விற்பனை அளவு, ஒரு கோடியே 37 லட்சத்து 70 ஆயிரத்தைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT