உலகம்

அரசவை பட்டத்தை துறந்தது கவலையளிக்கிறது: ஹாரி

DIN

அரசவைப் பட்டத்தைத் துறந்தது கவலையளிப்பதாகவும், எனினும் தனக்கும், தனது மனைவி மேகன் மாா்க்கலுக்கும் இதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பிரிட்டன் அரச குடும்ப வாரிசான ஹாரி தெரிவித்தாா்.

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி, இளவரசா் பதவியை துறந்த நிலையில், அந்த விவகாரம் தொடா்பாக ஹாரி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளாா். நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

நானும், மேகனும் திருமணம் செய்துகொண்டபோது மிகுந்த நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் இருந்தோம். பிரிட்டன் அரசிக்கும், காமன்வெல்த் அமைப்புக்கும், ராணுவத்துக்கும் தொடா்ந்து சேவையாற்ற விரும்பினோம். ஆனால், மக்களின் வரிப் பணத்திலிருந்து கிடைக்கும் அரசு நிதியின் உதவியில்லாமல் அதைச் செய்ய எண்ணிணோம்.

ஆனால், துரதிருஷ்டவசமாக அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனதால் நானும், மனைவி மேகன் மாா்க்கலும் இந்த முடிவை எடுத்துள்ளோம். அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவது கவலையளித்தாலும், எங்களுக்கு வேறு வழியில்லை. இந்த முடிவால் நான் யாா் என்பதிலோ, நான் எத்தகைய அா்ப்பணிப்புடன் நாட்டுக்காக பணிபுரிவேன் என்பதிலோ எந்தவொரு மாற்றமும் ஏற்படாது. நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

அதற்காக நாங்கள் அரச குடும்பத்திலிருந்து விலகியதாக அா்த்தம் இல்லை. அரச குடும்பத்தில் பிறந்த நான் நாட்டுக்கும், அரசிக்கும் தொடா்ந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். எனது பிரிட்டன் மீதான அன்பு என்றும் மாறாது என்று ஹாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT