உலகம்

பொருளாதார உலகமயமாக்கம் தடுக்கப்பட முடியாத ஒன்று

DIN

உலகப் பொருளாதார மன்றத்தின் 2020ஆம் ஆண்டுக் கூட்டம் 21ஆம் தேதி ஸ்வீட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற்றது.

117 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 3000 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர். உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பை சந்திக்கும் தருவாயில், பலதரப்புவாதம் மற்றும் தாராள வர்த்தகம் அறைகூவல்களைச் சந்திக்கும் பின்னணியில், உலகமயமாக்கத்தின் எதிர்காலம் என்பது குறித்து, இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, சில நாடுகள் மேற்கொண்டு வரும் ஒருதரப்புவாதமும் பாதுகாப்புவாதமும், உலகப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில பத்து ஆண்டுகாலத்தில் பொருளாதார உலகமயமாக்கச் சூழல் தடுக்கப்பட முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக, பல நாடுகள் வர்த்தகத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த வர்த்தக பாதுகாப்புவாத நடவடிக்கைகள், பொருளாதார உலகமயமாக்கத்திலுள்ள பிரச்னைகளைத் தீர்க்க முடியாது என்று உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் ராபெர்ட் அஸ்வேதொ அண்மையில் தெரிவித்தார்.

பொருளாதார உலகமயமாக்கம் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். புதுப்பிப்பை வலுப்படுத்தி, உயிராற்றலுடைய பொருளாதார அதிகரிப்பு வழிமுறையை உருவாக்க வேண்டும். ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பு அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாவோஸ் உலகப் பொருளாதார மன்றம் உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவு, இவ்வாண்டு ஆகும். இம்மன்றம், உலகிற்கு வெளிப்படைத்தன்மை வாய்ந்த மேடையைக் கொடுத்து, உலகமயமாக்க வளர்ச்சியைப் வெளிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT