முகப்பு
உலகம்

கடற்மட்டம் உயரும் அபாயம்: 1.30 கோடி அமெரிக்கர்கள் இடம்பெயர நேரிடும்

அமெரிக்காவின் கடலோரப் பகுதிகளில் கடற்மட்டம் உயர்ந்து வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் சுமார் 1.30 கோடி பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர நேரிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:35 PM
பகிர்:


லாஸ் ஏஞ்ஜெல்ஸ்: அமெரிக்காவின் கடலோரப் பகுதிகளில் கடற்மட்டம் உயர்ந்து வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் சுமார் 1.30 கோடி பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர நேரிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2100ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவின் பல கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் மாற்றிடங்களை நோக்கிச் செல்லும் நிலை ஏற்படும். 

கடற்மட்டம் உயர்ந்து, பரவலாக நாட்டின் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, அங்கு வாழும் மக்கள் நாட்டின் வேறு நகரங்களுக்கு குடிபெயருவார்கள்.

இதனால் ஒரு சில நகரங்களில் வாழும் மக்கள் தொகை கணிசமாக அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளுக்கு கடும் போட்டி, வீடுகளின் விலை உயர்வு, கட்டமைப்பை மேம்படுத்துவதில் பின்னடைவு ஏற்படும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.