முகப்பு
உலகம்

தகவல் தொழில் நுட்பத்தையும் உற்பத்தித் தொழிலையும் ஒருங்கிணைப்பாக வளர்க்க சீனா முயற்சி!

சீனப் பொருளாதாரச் சமூக வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்கும வகையில் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். அரசு சார் தொழில் நிறுவனங்கள்..

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:


சீனப் பொருளாதாரச் சமூக வளர்ச்சிக்குச் சாதகமான சூழலை உருவாக்கும வகையில் சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும். அரசு சார் தொழில் நிறுவனங்கள், புத்தாக்கம் மற்றும் இடர் தடுப்புக்கான திறனை மேம்படுத்த வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங், சீர்திருத்தத்தை விரிவாக ஆழமாக்கும் ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன் 30ஆம் தேதி வலியுறுத்தினார்.

புதிய தலைமுறை தகவல் தொழில் நுட்பத்தையும் உற்பத்தித் தொழிலையும் ஒருங்கிணைப்பாக வளர்ப்பதை விரைவுப்படுத்தவும், எண்முறை, இணையமயமாக்கம், நுண்ணறிவுத் திறன் ஆகிய துறைகளில் உற்பத்தித் தொழிலை மேம்படுத்தவும் வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில், சீனாவின் வேளாண்மை, கிராமப்புறம், கல்வி உள்ளிட்ட துறைகளிலும் சீர்திருத்தங்களுக்கான முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →