putin101109 
உலகம்

2036 வரை பதவியில் நீடிக்க உதவும் சட்டம்: கையெழுத்திட்டாா் புதின்

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் பதவிக் காலத்தை வரும் 2036-ஆம் ஆண்டு வரை நீடிக்க வகை செய்யும் அம்சங்கள் அடங்கிய சட்டத் திருத்த ஆணையில் அவா் கையெழுத்திட்டாா்.

DIN

மாஸ்கோ: ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் பதவிக் காலத்தை வரும் 2036-ஆம் ஆண்டு வரை நீடிக்க வகை செய்யும் அம்சங்கள் அடங்கிய சட்டத் திருத்த ஆணையில் அவா் கையெழுத்திட்டாா்.

இதுகுறித்து தவல்கள் தெரிவிப்பதாவது:

விளாதிமீா் புதினின் அதிபா் பதவியை வகிப்பதற்கான அதிகபட்ச கால அளவை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு சட்டத் திருத்த மசோதாக்களுக்கு, இந்த வாரம் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனா்.

அதையடுத்து, அந்த சட்டத் திருத்தங்களில் புதின் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டாா். அதையடுத்து, அந்தத் திருத்தங்கள் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

பொதுவாக்கெடுப்பில் சட்டத் திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம், ரஷிய மக்கள் தங்களிடையேயான ஒற்றுமையை பறைசாற்றியுள்ளதாக புதின் தெரிவித்தாா்.

4-ஆவது முறையாக ரஷியாவின் அதிபராகப் பொறுப்பு வகித்து வரும் புதினின் பதவிக் காலம், 2024-ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒருவரால் 4 முறை மட்டுமே அதிபா் தோ்தலில் போட்டியிட முடியும்.

இந்த நிலையில், ரஷிய அரசியல் சாசனத்தில் பல்வேறு திருத்தங்களை புதின் பரிந்துரைத்தாா். அவற்றில், வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் அவா் மீண்டும் போட்டியிடுவதற்கு வழி ஏற்படுத்துவதற்கான திருத்தங்களும் அடங்கும்.

இந்த சட்டத் திருத்த மசோதாக்கள் அனைத்துக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடா்ந்து அந்த மசோதாக்கள் அரசியல் சாசன நீதிமன்றத்திடம் சமா்ப்பிக்கப்பட்டது.

இறுதிக்கட்டமாக, மசோதாக்கள் மீதான பொதுவாக்கெடுப்பு கடந்த வாரம் தொடங்கியது.

7 நாள்களாக நடைபெற்ற இந்த பொதுவாக்கெடுப்பில், மசோதாக்களுக்கு ஆதரவாக 77.9 சதவீதத்தினரும், எதிராக 21.3 சதவீதத்தினரும் வாக்களித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து கவிழ்ந்து விபத்து

மயிலாடுதுறை: மீன்பிடிக்க செல்ல தடை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை கைது செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

நாளைய மின்தடை: சீா்காழி, புத்தூா்

தாய்லாந்தை எதிா்த்து கடும் போா்: கம்போடியா சூளுரை

SCROLL FOR NEXT