உலகம்

ரஷியாவில் மேலும் 6,537 பேருக்கு தொற்று; பாதிப்பு 7,33,699 ஆக அதிகரிப்பு!

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,537 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,33,699 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. முன்னதாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,  ஒரேநாளில் 6,537 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 7,33,699 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதித்தோரில் 1,812 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 104 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 11,439 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது வரை 5,04,021 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,960 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2,30,029 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT