உலகம்

அமெரிக்காவின் மனித உரிமை பிரச்னைகளை ஏற்படுத்தும் ஏழை - பணக்கார இடைவெளி

DIN

அமெரிக்காவில் காணப்படும் ஏழை பணக்கார இடைவெளி காரணமாக ஏற்படும் மனித உரிமை பிரச்சினைகள் அந்நாட்டில் மோசமாகி வருவது தொடர்பான கட்டுரையை சீன மனித உரிமை ஆய்வகம் 14ஆம் நாள் வெளியிட்டுள்ளது.

உண்மைத் தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில் அமெரிக்காவில் ஏழை பணக்கார இடைவெளியால் ஏற்பட்டுள்ள மனித உரிமைப் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் காணப்படும் ஏழை பணக்கார இடைவெளி, மனித உரிமைகளை உணர்தல் மற்றும் அனுபவித்தல் ஆகியனவற்றுக்குத் தடையாக உள்ளது. கிட்டத்தட்ட பாதியளவான அமெரிக்கக் குடும்பங்களால் அடிப்படைத் தேவைகளுடன் கூடிய வாழ்க்கையைக் கூட வாழ முடியவில்லை.

அதோடு குறைவான வருமானமுடைய மக்கள் பசி குறித்த அச்சம் மற்றும் கல்வி கற்பதில் சமவாய்ப்பற்ற நிலைமை ஆகியவற்றை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. வீடுகள் இல்லாத மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் வாடகை செலுத்தாத காரணத்தினால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசு கரோனா வைரஸ் பரவலை சரியாகச் சமாளிக்க முடியாததன் காரணமாக  அந்நாட்டில் மேலும் கடுமையான மனித உரிமை நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT