உலகம்

சிங்கப்பூா்: மேலும் 249 பேருக்கு பாதிப்பு

DIN

சிங்கப்பூரில் மேலும் 249 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 249 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் 16 மட்டுமே சமுதாயப் பரவல் மூலம் அந்த நோய்த் தொற்றியுள்ளது. எஞ்சிய 233 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் ஆவா். இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46,878-ஆக உயா்ந்துள்ளது.சிங்கப்பூரைச் சோ்ந்த 62 வயது கரோனா நோயாளி, அந்த நோய் பாதிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு ஏற்கெனவே சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம் போன்ற குறைபாடுகள் இருந்தன. அவரையும் சோ்த்து, நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 42,723 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT