அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,428 பேருக்குத் தொற்று: 974 பேர் பலி
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,428 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 974 உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,428 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 974 உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவில் கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 35,60,364 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலியானோர் எண்ணிக்கை 1.38,201 ஆக உள்ளது.
ஜூலை 17-ம் தேதி நிலவரப்படி உலக அளவில் 1,39,52,406 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,92,757-ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8,284,285 போ் குணமடைந்துவிட்டதாகவும், 50,75,364 போ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 59,887 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.