சீனப் பொருளாதாரத்தின் விரைவான மீட்சிக்குக் காரணம்
சீனாவின் 2ஆவது காலாண்டின் பொருளாதார தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வெளிநாட்டு அறிஞர்கள் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.
சீனாவின் 2ஆவது காலாண்டின் பொருளாதார தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வெளிநாட்டு அறிஞர்கள் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.
சீனாவின் 2ஆவது காலாண்டின் பொருளாதார அதிகரிப்பு, முன்மதிப்பீட்டை விட சீராக உள்ளது. இது, உலகத்திற்கு நல்ல செய்தி. கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சீன அரசின் கொள்கை மற்றும் சீனப் பொருளாதாரத்தின் வலிமைத் தன்மை இதற்குக் காராணமாகும் என்று பிரிட்டன் இலண்டன் அரசியல் மற்றும் பொருளாதார கல்லூரியின் பேராசிரியர் ஆன்த்சன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு விகிதம் ஊக்கமளிப்பதாக உள்ளது. சீனப் பொருளாதாரத்தின் முதலாவது காலாண்டில், பொருளாதாரம் 6.8 விழுக்காடு குறைந்துள்ளது. 2ஆவது காலாண்டில், 3.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. பல்வேறு வழிமுறைகளின் மூலம், பொருளாதாரத்தின் சரிவை சீனா தவிர்த்துள்ளது என்பது ஆச்சரியமளிக்க கூடியதாக உள்ளது.
கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக தடுத்தது போல், சீனப் பொருளாதாரத்தின் விரைவான மீட்சி, சீன அரசின் வலிமையான நிர்வாகத் திறனை வெளிப்படுத்தியுள்ளது என்று பிரிட்டன் அறிஞர் மாடின் ஜாகஸ் தெரிவித்தார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்