ரஷியாவில் மேலும் 6,109 பேருக்கு தொற்று; பாதிப்பு 7,71,546 ஆக அதிகரிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,109 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,71,546 ஆக அதிகரித்துள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,109 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,71,546 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. முன்னதாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரேநாளில் 6,109 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 7,71,546 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 95 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 12,342 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது வரை 5,50,344 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.