முகப்பு
உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 70ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு காரணம் என்ன?

கிழக்கு அமெரிக்க நேரப்படி 18ஆம் நாள் மாலை 7 மணிக்கு, அந்நாட்டில் 36 லடத்துக்கும் மேலான பேருக்கு புதிய ரக கரோனா தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:

கிழக்கு அமெரிக்க நேரப்படி 18ஆம் நாள் மாலை 7 மணிக்கு, அந்நாட்டில் 36 லடத்துக்கும் மேலான பேருக்கு புதிய ரக கரோனா தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும்,  கடந்த 24 மணி நேரத்தில், அமெரிக்காவில் 72,045 பேர் இத்தொற்று நோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின இணையதளத்தில் 17ஆம் நாள் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தொற்று நோய் ஏற்பட்ட பிறகு, ஒரே நாளில் 70ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்திருப்பது இதுவே  முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கரோனா தொற்று நோய் மோசமாகி வருவதற்கான காரணம் என்ன?தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அறிவியல்பூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ளவில்லை என்பது அதன் முக்கிய காரணமாகும்.

அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி 14ஆம் நாள் பேசுகையில், எந்த நிலை இருந்தாலும், தரவுகள் ரீதியிலான ஆதாரம் தான்  முக்கியம். அறிவியல்பூர்வமான முறையில் தொற்று நோயைச் சமாளிக்க வேண்டும். நோய் தடுப்பில் அரசியல் சர்ச்சைகளின் தலையீட்டை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் ஜில்பெர்ட் பேசுகையில், தொற்று நோய்,  மருத்துவ இயல் பிரச்சினை ஆகும். அது, அரசியலுடன் தொடர்பு இல்லை. ஆனால், அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.  புதிய ரக கரோனா வைரஸை எதிர்த்து போராடும் வகையில், அறிவியலின் தலைமையிலான போராட்டம் நடக்க வேண்டும் ஆனால், அறிவியலின் பங்களிப்பு அமெரிக்காவில் முன்பு இல்லாத அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் தொற்றுநோய் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் அரசியல்வாதிகள் சிலர், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி நோய் தடுப்பு மற்றும கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தனது பொறுப்புகளைத் தட்டிக் கழித்து, எல்லாவற்றிலும் பிற நாடுகளை விமர்சிப்பதற்குப் பதிலாக, உள்நாட்டில் நோய் தடுப்புப் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

தகவல்-சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.