உலகம்

பாகிஸ்தானில் குறைந்துவரும் கரோனா பாதிப்பு

PTI

பாகிஸ்தானில் கடந்த இரண்டரை மாதங்களில், இன்று தான் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக பதிவாகி இருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,013 பேர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அந்த நாட்டில் மொத்த பாதிப்பு 2,66,095 ஆக உயர்ந்துள்ளது. 

இதையடுத்து, ஒரே நாளில் 40 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 5,639 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,481 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்த 2,08,030 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். திங்கள்கிழமை ஒரே நாளில் 17,783 பேருக்கு சோதனை செய்யப்பட்ட நிலையில், 1,013 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. 

இதுவரை நாட்டில் 1,75,8,551 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT