உலகம்

பொருளாதார வளர்ச்சியில் தொழில் நிறுவனங்களின் மேலதிக பங்களிப்பு

DIN

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 21ஆம் நாள் பெய்ஜிங்கில் தொழில் முனைவோருடன் இணைந்து உரையாடல் கூட்டம் நடத்தி, முக்கிய உரை நிகழ்த்தினார். 

அப்போது, ஷிச்சின்பிங் பேசுகையில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, சீனாவில் சந்தைப் பொருளாதார அமைப்புமுறை உருவாக்கப்பட்டு இடைவிடாமல் முழுமைப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வகை தொழில் நிறுவனங்கள் செழிப்புடன் வளர்ந்து வருகின்றன. கொவைட்-19 தொற்று நோய், சீன மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில், முன்பு இல்லாத அளவில் பெரும் அழுத்தங்களை தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன.

இந்நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் நிறுவனங்கள் மேலதிக பங்காற்றி, பெரிய வளர்ச்சி அடைவதை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும்,பொருளாதார உலகமயமாக்கம், கால ஓட்டத்தின் கட்டயமாகும். பல்வேறு நாடுகள் ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவது என்பது நீண்டகாலப் போக்கு ஆகும். சீர்திருத்தங்களை ஆழமாக்கி, திறப்பை விரிவாக்க, அறிவியல் தொழில் நுட்ப துறைகளில் திறப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, திறந்த நிலை உலகப் பொருளாதாரத்தின் உருவாக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தகவல் - சீன ஊடக குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT