சீனாவில் நிதானமாகவுள்ள வேலை வாய்ப்பு நிலைமை 
உலகம்

சீனாவில் நிதானமாகவுள்ள வேலை வாய்ப்பு நிலைமை

சீன மனித மூலவளம் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகம் ஜூலை 21 ஆம் நாள் செய்தியாளர்க் கூட்டம் ஒன்றை நடத்தியது.

DIN

சீன மனித மூலவளம் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகம் ஜூலை 21 ஆம் நாள் செய்தியாளர்க் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில், இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில், சீனாவின் வேலை வாய்ப்பு நிலைமை நிதானமாக மீட்சியடைந்துள்ளதாகவும் இக்காலத்தில் நகரப் பகுதியில் 56 இலட்சத்து 40 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதிவு செய்யப்பட்ட வேலை வாய்ப்பற்றவர்களின் விகிதம் 3.84 விழுக்காடாக உள்ளதாகவும்,  அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் இவ்வாண்டின் பிற்பாதியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, தொழில் நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் வகையில், சமூக காப்புறுதியைச் செலுத்தும் கட்டணத்துக்கு விலக்கு அளிக்கும் காலம் மீண்டும் நீடிக்கப்படுவதாகவும், பட்டம் பெற்றும் வேலை வாய்ப்பில்லாத மாணவர்களுக்கு உரிய சேவை அளிக்கப்படும் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் தொடர்புடைய பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT