முகப்பு
உலகம்

ரஷியாவில் ஒரேநாளில் 5,848 பேருக்கு கரோனா; மேலும் 147 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,848 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,95,038 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
கோப்புப்படம்
பகிர்:

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,848 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,95,038 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. முன்னதாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  ஒரேநாளில் 5,848 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 7,95,038 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 12,892 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் தற்போது வரை 5,80,330 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,277 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்போது 2,67,315 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தலைநகர் மாஸ்கோவில் நேற்று 608 பேர் உள்பட இதுவரை 2,35,971 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.