உலகம்

சர்வதேச சட்டத்தை அத்துமீறி சீனத் துணை தூதரகத்தை மூட கோரும் அமெரிக்கா

DIN

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணை தூதரகத்தை சீனா மூட வேண்டும் என்று அமெரிக்கா 21ஆம் நாள் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் நட்பற்ற ஆத்திரமூட்டல் நடவடிக்கை இதுவாகும். தூதாண்மை விதிமுறை மற்றும் “வியன்னா தூதாண்மை உறவு பொது ஒப்பந்தம்” ஆகியவற்றை இது கடுமையாக மீறியுள்ளது. அமெரிக்காவின் இச்செயல் சீன-அமெரிக்க உறவைச் சீர்குலைக்கும் அதே வேளையில், இது உலக அரசியல் நிதானத்துக்கும் பொருளாதார மீட்சிக்கும் தீங்கு விளைவிக்கும். 

அமெரிக்காவின் இந்நடவடிக்கையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நலன்களை நாடி, உள்நாட்டில் புதிய ரக கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தவறிய தங்களது அலட்சியத்தில் இருந்து அமெரிக்கர்களின் கவனத்தைத் திருப்பும் வகையில், பல்வேறு துறைகளில் சீனாவைத் தாக்க முயல்கின்றனர். அமெரிக்காவின் இந்நடவடிக்கை ஆபத்தானது.

இது, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இருக்கும் எந்த பிரச்சினையையும் தீர்ப்பதற்கு துணை புரியாது. அதோடு, பதற்ற நிலையில் உள்ள இரு நாட்டுறவை மேலும் தீவிரமாக்கும்.

அமெரிக்காவின் இந்நடவடிக்கை சீனாவுடனான தூதாண்மை சர்ச்சையை மோசமாக்கும் அதே வேளையில், சீன, அமெரிக்க மக்களிடையே இயல்பான பரிமாற்றத்தையும் சீர்குலைக்கும். 

எனவே, அமெரிக்க அரசு பனிப் போர் கருத்தைக் கைவிட்டு, சீன-அமெரிக்க உறவின் ஒட்டுமொத்த நிலைமையைக் கருத்தில் கொண்டு,  தமது அரசியல் நோக்கத்தை நனவாக்க இத்தகைய வழிமுறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என விரும்புகிறோம்.

தகவல்: சீன ஊடக குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT