உலகம்

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.56 கோடியாக உயர்வு

DIN

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,56,54,428 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6,36,475 ஆக அதிகரித்துள்ளது.  

உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பு மருந்துகள் வெளிவராத நிலையில், கரோனா பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா தொற்று உலகம் முழுவதும் 220 நாடுகளுக்கு மேல் பரவி முடக்கிப்போட்டுள்ளது. உலக அளவில் கரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. பிரேசில், இந்தியா அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகிறது. 

உலக அளவில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 12,441 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,56,54,428 -ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 809 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்மொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை  6,30,313 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 95,35,616 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 54, 82,337போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 66,256 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா அதிகம் பரவிய நாடுகள்:
அமெரிக்கா: 41,69,991    
பிரேசில்:  22,89,951    
இந்தியா:  12,88,130    
ரஷியா:  7,95,038    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT