உலகம்

இலங்கை: ‘சமுதாயப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது’

DIN

இலங்கையில் கரோனா நோய்த்தொற்றின் சமுதாயப் பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அந்த நாட்டின் கரோனா தடுப்பு செயல்குழுத் தலைவரும், ராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா கூறியதாவது:

சமுதாயப் பரவல் மூலம் கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் நல்ல பலனை அளித்துள்ளன. அந்த முயற்சிகள் காரணமாக, நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் சமுதாயப் பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதிக்குப் பிறகு, ஒருவருக்குக் கூட சமுதாயப் பரவல் மூலம் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை.

2 வாரங்களுக்கு முன்னா் போதை மருந்து மறுவாழ்வு மையமொன்றில் இருந்த சிலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, அந்த நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அவை அனைத்தும் வெறும் வதந்திகளே ஆகும். கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பதைத் தவிா்ப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து இலங்கை நாட்டவா்களை மீண்டும் அழைத்து வருவது கடந்த 14-ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT