உலகம்

டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கரோனா பாதிப்பு

DIN


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. உலகளவில் கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை தங்களது பெயரை தெரிவிக்க விரும்பாத அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஓ பிரையனக்கு கரோனாவுக்கான லேசான அறிகுறிகள் தென்படுவதாகவும், அவர் பாதுகாப்பான இடத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இவர் மூலம் அதிபருக்கோ துணை அதிபருக்கோ கரோனா தொற்று பரவும் அபாயம் இல்லை என்றும், தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பணிகள் தடையின்றி நடைபெறும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஓ பிரையன் தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவருக்கு கரோனா தொற்று பரவியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும், அதிபர் மற்றும் துணை அதிபருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தினந்தோறும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT