உலகம்

மக்களே முதன்மை என்ற அடிப்படையில் வைரஸுக்கு எதிரான போராட்டம்

DIN

மக்களே முதன்மை என்ற அடிப்படையில் வைரஸுக்கு எதிரான போராட்டம் என்ற கட்டுரையை சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் ஜூலை 29ஆம் நாள் வெளியிட்டது.

புதிய ரக கரோனா வைரஸ் தொற்று என்பது, நவ சீனா நிறுவப்பட்ட பிறகு மிக வேகமாக மற்றும் மிகப் பெரிய அளவில் பரவியதாகவும், அதற்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இன்னல்கள் மிக்க பொது சுகாதாரச் சம்பவமாகவும் உள்ளது. இதனை எதிர்கொள்ளும் சீனா, பொது மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தை முதலிடத்தில் வைத்து செயல்படுவது, மக்களே முதன்மை என்ற சீனாவின் மனித உரிமைச் சிந்தனையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நோயாளிக்கும் முழுமூச்சுடன் சிகிக்கை அளிப்பது, பொது மக்களின் நன்மைக்காகப் பாடுபடுவது, மக்களின் உரிமை நலன்களுக்கு உத்தரவாதம் அளிப்பது, சர்வதேச ஒத்துழைப்புடன் நோயைத் தடுப்பது ஆகிய 4 துறைகளிலிருந்து மக்களும் அவர்களின் வாழ்வுமே முதன்மை என்ற விழுமியம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

பொறுப்புணர்வுடன் செயல்படும் பெரிய நாடான சீனா, முன்பு போலவே மக்களின் பல்வேறு உரிமை நலன்களையும் பேணிகாத்து உத்தவாதம் செய்யும் வகையில் பாடுபட்டு, மனித உரிமை துறையின் சீரான வளர்ச்சியை இடைவிடாமல் முன்னெடுத்துச் செல்லும் என்று இக்கட்டுரையில் உறுதியுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT